உள்ளூர் செய்திகள்

பக்தர்கள் ஸ்ரீ கோதாநாயகி ஆண்டாள்- ரங்கமன்னார்  கருட வாகனத்தில் பக்தர்கள் சேவித்த காட்சி.

உடுமலை நவநீதகிருஷ்ணன் கோவிலில் சிறப்பு வழிபாடு

Published On 2023-07-24 10:35 IST   |   Update On 2023-07-24 10:35:00 IST
  • ஸ்ரீ கோதாநாயகி ஆண்டாள்- ரங்கமன்னார் சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.
  • பக்தர்கள் ஆண்டவர் பாடல்கள் பாடி கோவிலை சுற்றி வந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரரட்சிக்குட்பட்ட சுமார் 350 வருடங்களுக்கு மேலான புகழ்வாய்ந்த நவநீத கிருஷ்ணன் கோவிலில் உள்ள ஸ்ரீ கோதாநாயகி ஆண்டாள்- ரங்கமன்னார் சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்கள், பால், பன்னீர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், நெய் பழங்கள், நலங்கு பொடி, போன்ற பொருட்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது.

ஸ்ரீ கோதாநாயகி ஆண்டாள்- ரங்கமன்னார் திருக்கோலத்தில் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பக்தர்கள் ஆண்டவர் பாடல்கள் பாடி கோவிலை சுற்றி வந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News