உள்ளூர் செய்திகள்

வித்யா கணபதி.

சிவன்மலை ஜேசீஸ் பள்ளி வித்யா கணபதி கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது

Published On 2023-04-25 10:18 GMT   |   Update On 2023-04-25 10:18 GMT
  • சிவன்மலை சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி நடத்தி வைக்கிறார்கள்.
  • கொடுவாய் வெற்றி வேலன் குழுவினரின் வள்ளி கும்மியாட்டம், நேற்று காங்கயம் தமிழர் பாரம்பரிய கலை மன்றத்தின் சங்கமம் ஒயிலாட்டமும் நடைபெற்றது.

காங்கயம்:

காங்கயம் அருகே உள்ள சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஸ்ரீவித்யா கணபதி மற்றும் அதன் பரிவார தெய்வங்களான தட்சிணாமூர்த்தி, பால சுப்பிரமணியசுவாமி, சரஸ்வதிதேவி, ஸ்ரீஹயக்ரீவர், ஸ்ரீ பிரம்மா ஆகியவை உள்ளன. இவைகள் கலைநயத்துடனும், சிற்ப சாஸ்திரப்படியும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் தொடங்கின.

இதைத்தொடர்ந்து நாளை (புதன்கிழமை) காலை 9மணி முதல் 10-30மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. விழாவை கூனம்பட்டி ஆதீனம் ராஜசரவண மாணிக்கவாசக சுவாமிகள், மடாதிபதிகள், சிவன்மலை சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி நடத்தி வைக்கிறார்கள்.

விழாவை முன்னிட்டு கடந்த 23-ந்தேதி வாழும் கலை அமைப்பின் சார்பில் திவ்ய சத் சங்கம் நிகழ்ச்சி, கொடுவாய் வெற்றி வேலன் குழுவினரின் வள்ளி கும்மியாட்டம், நேற்று காங்கயம் தமிழர் பாரம்பரிய கலை மன்றத்தின் சங்கமம் ஒயிலாட்டமும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை சிவன்மலை ஜேசீஸ் கல்வி அறக்கட்டளை நிர்வாகத்தினர் செய்துள்ளனர். முன்னதாக அனைவரையும் அறக்கட்டளை அங்கத்தினர்கள், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வரவேற்கிறார்கள்.  

Tags:    

Similar News