உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பட்டுக்கூடு உற்பத்தி தொழில் - மானியம் பெற பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்

Published On 2023-03-28 04:22 GMT   |   Update On 2023-03-28 04:22 GMT
  • அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் ‘ஈரி’ வகை பட்டுப்புழுக்களை வளர்த்து, பட்டு நூல் உற்பத்தியில் பழங்குடியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
  • பட்டுப்புழுக்களுக்கு ஆமணக்கு, மரவள்ளி இலைகள் உணவாக வழங்கப்படுகிறது.

உடுமலை :

இந்தியாவில், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் 'ஈரி' வகை பட்டுப்புழுக்களை வளர்த்து, பட்டு நூல் உற்பத்தியில் பழங்குடியினர் ஈடுபட்டு வருகின்றனர்.பட்டுப்புழு வளர்ப்புக்கான முட்டைகளை அம்மாநில அரசே 26 உற்பத்தி மையங்கள் வாயிலாக பழங்குடியினருக்கு வழங்கி வருகிறது.

இவ்வகை பட்டுப்புழுக்களுக்கு ஆமணக்கு, மரவள்ளி இலைகள் உணவாக வழங்கப்படுகிறது. வனப்பகுதியில் நிலவும் தட்பவெப்ப நிலை 'ஈரி' வகை பட்டுப்புழு வளர்ப்புக்கு உகந்ததாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் 'ஈரி' வகை பட்டுப்புழு வளர்ப்பு தொழில் குறித்த விழிப்புணர்வு இல்லை.

இந்நிலையில் பழங்குடியினருக்கு நிரந்தர வருவாய் கிடைக்கவும், மத்திய அரசு வாயிலாக மானியத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புழு வளர்ப்பு மனை கட்ட மொத்த மதிப்பான ஒரு லட்சம் ரூபாயில் 90 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.இதே போல் வீரிய ரக ஆமணக்கு சாகுபடி, புழு வளர்ப்பு தளவாடங்கள், பண்ணை உபகரணங்களும் 90 சதவீத மானியத்தில் கொள்முதல் செய்து வழங்கப்படும்.சம்பந்தப்பட்ட பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் மானியத்துக்கு பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்.

Tags:    

Similar News