உள்ளூர் செய்திகள்
மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி மலையில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த விநாயக பெருமான்.
பல்லடம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
- விநாயகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- 16 வகை திரவியங்களால் அபிஷேக பூஜை நடைபெற்றது.
பல்லடம்
பல்லடம் பகுதியில் உள்ள கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதன்படி பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலை கோவிலில் விநாயகப் பெருமானுக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேக பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதே போல் பல்லடம் செல்வ விநாயகர் திருக்கோவில், பொன்காளியம்மன் கோவில்,சித்தம்பலம் கோளறுபதி நவகிரக கோட்டை உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.