உள்ளூர் செய்திகள்

சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் தி.மு.க.வில் இணைந்த காட்சி.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் தி.மு.க.வில் இணைந்தார்

Published On 2023-03-12 13:07 IST   |   Update On 2023-03-12 13:07:00 IST
  • மாற்றுக்கட்சியினர் 10,000 பேர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது.
  • திமுக கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் :

கோவை மாவட்டம், சின்னியம்பாளையம் பகுதியில் மாற்றுக்கட்சியினர் 10,000பேர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், திமுக கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் தமிழ்நாட்டின் முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி, மற்றும் சாமளாபுரம் பேரூராட்சிமன்ற 4வது கவுன்சிலர் மைதிலி , சாமளாபுரம் பேரூராட்சி மன்ற 9வது வார்டு கவுன்சிலர் மகாலட்சுமி, சாமளாபுரம் நகர காங்கிரஸ் பொறுப்பாளர் பாலசந்தர் உள்பட பலர் திமுகவில் இணைந்தனர்.

Tags:    

Similar News