உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூர் உழவர்சந்தைகளில் ரூ.8½ கோடிக்கு காய்கறிகள் விற்பனை

Published On 2022-07-13 05:12 GMT   |   Update On 2022-07-13 05:12 GMT
  • தெற்கு உழவர்சந்தைக்கு 75 முதல் 90 டன் காய்கறிகளும், வடக்கு சந்தைக்கு 12 முதல்16 டன் காய்கறிகளும் தினசரி விற்பனைக்கு வருகிறது.
  • நள்ளிரவு முதல் அதிகாலைக்குள் 2 முதல் 3 லட்சம் ரூபாய்க்கு காய்கறி விற்பனையாகிறது.

திருப்பூர் :

திருப்பூர் பல்லடம் ரோட்டில் தென்னம்பாளையம் உழவர் சந்தையும், புதிய பஸ் நிலையம் பின்புறம் வடக்கு உழவர் சந்தையும் செயல்படுகிறது.

ற்கு உழவர்சந் தைக்கு நாள் ஒன்றுக்கு 75 முதல் 90 டன் காய்கறிகளும், வடக்கு சந்தைக்கு தினசரி 12 முதல்16 டன் காய்கறிகளும் விற்பனைக்கு வருகிறது.திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி, பிற மாவட்டங்களில் இருந்தும் சந்தைக்கு காய்கறி வாங்க வியாபாரிகள் பலர் திரள்கின்றனர். திருப்பூர் தெற்கு சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 350 விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். வாங்கிச்செல்ல 4,500 பேர் வருகின்றனர்.நள்ளிரவு முதல் அதிகாலைக்குள் 2 முதல் 3 லட்சம் ரூபாய்க்கு காய்கறி விற்பனையாகிறது. இச்சந்தையில் கடந்த ஜூன் மாதத்தில் 2,507 டன் காய்கறி விற்பனையாகியுள்ளது. ரூ.6.98 கோடிக்கு காய்கறி விற்பனை நடந்துள்ளது. காய்கறி வாங்க கடந்த மாதத்தில் 1.49 லட்சம் பேர் வருகை புரிந்துள்ளனர்.

வடக்கு சந்தையில் கடந்த மாதத்தில் 513 டன் காய்கறி ரூ. 1.47 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. 63 ஆயிரம் பேர் காய்கறி வாங்க வந்துள்ளனர். கடந்த ஜூன் மாதத்தில் இரு சந்தைகளிலும் சேர்த்து ரூ. 8.45 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது.

Tags:    

Similar News