விழிப்புணர்வு முகாம் நடைபெற்றக் காட்சி.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
- நெடுஞ்சாலைத்துறை பல்லடம் உதவி கோட்ட பொறியாளர் தனலட்சுமி தலைமை தாங்கினார்.
- விழாவில் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறப்பட்டது.
பல்லடம்:
பல்லடம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் பல்லடம் நால்ரோடு பகுதியில் நடைபெற்றது. நெடுஞ்சாலைத்துறை பல்லடம் உதவி கோட்ட பொறியாளர் தனலட்சுமி தலைமை தாங்கினார்.
பல்லடம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, சப்-இன்ஸ்பெக்டர்கள் அண்ணாதுரை, ராஜா, பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பாபு வரவேற்றார். விழாவில் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறப்பட்டது. பின்னர் சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற இரு சக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மேலும் தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீசார், நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள்,சாலை பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.