உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

அரசு போக்குவரத்து கழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

Published On 2022-07-05 05:34 GMT   |   Update On 2022-07-05 05:34 GMT
  • 2014ம் ஆண்டுக்கு பின்னர் புதிய பணியாளர்களே நியமிக்கப்படவில்லை.
  • மகளிருக்கு கட்டணம் இலவசம் என அறிவிக்கப்பட்டதால், கடும் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

பல்லடம் :

அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பல்லடம் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கூறியதாவது:- அரசு போக்குவரத்து கழகத்தில்,கடந்த 2014ம் ஆண்டுக்கு பின்னர் புதிய பணியாளர்களே நியமிக்கப்படவில்லை.

சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலையில் புதிதாக ஆண்டு தோறும் பஸ்கள் வாங்கப்படுகின்றன.ஆனால் அதற்கேற்ப பணியாளர்கள் இல்லாததால் எங்களின் பணிச்சுமை அதிகரிக்கிறது. கடந்த ஆட்சிக்காலத்தின் போது 58ஆக இருந்த ஓய்வு பெறும் வயது 60ஆக உயர்த்தப்பட்டது. இதனால் ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்கள் மீண்டும் பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர். தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதும், மகளிருக்கு கட்டணம் இலவசம் என அறிவிக்கப்பட்டதால், கடும் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகின்றனர். இதன் காரணமாகவும் புதிதாக பணியாளர்களை நியமிப்பது தாமதமாகி வருகிறது. பணியாளர்கள் அதிகரிக்கப்படாததால், தற்போதுள்ள ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்து மன உளைச்சல் ஏற்படுகிறது.

மேலும் புதிதாக வேலைக்கு சேர காத்திருக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் உள்ளது. எனவே தமிழக அரசு அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள காலி பணியிடங்களை விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News