உள்ளூர் செய்திகள்

பள்ளி கட்டிடத்தின் முன்புறத்தில் சுவர் பெயர்ந்துள்ளதை படத்தில் காணலாம்.

பல்லடம் அருகே பள்ளி கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை

Published On 2022-11-02 11:32 GMT   |   Update On 2022-11-02 11:32 GMT
  • 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர்.
  • இந்த பள்ளியானது கடந்த 2005 ம் ஆண்டு ரூ.4.50 லட்சம் திட்டநிதியில் பொதுமக்களின் பங்களிப்புடன் துவங்கப்பட்டது.

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள கரைப்புதூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர். மேலும் இந்த பள்ளியானது கடந்த 2005 ம் ஆண்டு ரூ.4.50 லட்சம் திட்டநிதியில் பொதுமக்களின் பங்களிப்புடன் துவங்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2008 ஆம் ஆண்டு ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. தற்போது தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி என இரு பிரிவுகளில் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

தற்போது வகுப்பறை பற்றாக்குறையால் மாணவர்கள் பாதிபேர் இருக்கையிலும் மீதி பேர் தரையில் அமர்ந்தும் படித்து வருவதாகவும்,பள்ளி கட்டிடத்தின் முன்புறத்தில் ஒரு கட்டிடத்தின் முகப்பு இடிபாடுகளுடன் காணப்படுவதால் மாணவர்கள் அச்சத்துடன் பள்ளிக்கு வந்து செல்வதாகவும் பெற்றோர்கள் கவலையுடன் தெரிவித்தனர். மேலும் சத்துணவு திட்டத்தில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக உள்ளதாகவும் இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கையில்லை என்றும், எனவே மாவட்ட நிர்வாகமும், பள்ளி கல்வித்துறையும் உடனடி நடவடிக்கை எடுத்து பள்ளி கட்டிடத்தை பராமரித்தும்,சத்துணவு திட்டத்திற்கு தரமான அரிசி வழங்கவேண்டும். இவ்வாறு கரைப்புதூர் பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News