உள்ளூர் செய்திகள்

தள்ளுவண்டிகளை அதிகாரிகள் அகற்றிய காட்சி.

உடுமலையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Published On 2023-06-15 07:13 GMT   |   Update On 2023-06-15 07:13 GMT
  • சாலையில் வாரச்சந்தை, ரெயில் நிலையம், உழவர் சந்தை, வணிக வளாகங்கள் செயல்பட்டு வருகிறது.
  • சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

உடுமலை :

உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ராஜேந்திர ரோடு, கபூர் கான் வீதி, ராமசாமி நகர் வழியாக சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையில் வாரச்சந்தை, ரெயில் நிலையம், உழவர் சந்தை உள்ளிட்டவையும் வணிக வளாகங்கள், தனியார் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இதனால் சாலையில் வாகன போக்குவரத்து தொடர்ந்து இருந்து கொண்டே உள்ளது. இந்தநிலையில் ராஜேந்திரா சாலையின் ஓரத்தில் தள்ளுவண்டிகள் நிறுத்தி சில்லறை வியாபாரிகள் விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.

இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து ராஜேந்திர சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்ட தள்ளுவண்டிகளை நகர அமைப்பு ஆய்வாளர் உதயகுமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று அகற்றினர். இதனால் சீரான போக்குவரத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் நிலவுவதால் பொதுமக்கள்- வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் இதே போன்று மற்ற பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News