வாலிபரிடம் பணத்தை ஒப்படைத்தக் காட்சி.
பெருமாநல்லூரில் நடுரோட்டில் கிடந்த ரூ.50ஆயிரம் பணத்தை மீட்டுபோலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு பாராட்டு
- வாலிபர் ஒருவர் பணத்தை தேடி கொண்டிருப்பதை ஆட்டோ டிரைவர்கள் பார்த்தனர்.
- மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது தாயின் கைப்பையில் இருந்து தவறி விழுந்தது தெரியவந்தது
திருப்பூர்:
திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் இன்று காலை நடுரோட்டில் ரூ.50,000 பணம் கட்டு ஒன்று கிடந்தது.இதனை பார்த்த ஆட்டோ டிரைவர் அபிமன்னன் (வயது 48) அதனை மீட்டு அக்கம் பக்கத்தில் விசாரித்தார். ஆனால் யாரும் பணத்திற்கு உரிமை கொண்டாடி வரவில்லை.இதனையடுத்து சக டிரைவர்களுடன் பெருமாநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று பெருமாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் பணத்தை ஒப்படைத்தார்.
இந்தநிலையில் வாலிபர் ஒருவர் பணத்தை தேடி கொண்டிருப்பதை பார்த்த ஆட்டோ டிரைவர்கள் அந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். போலீசார் விசாரணை நடத்திய போது அந்த வாலிபர் திருப்பூரை சேர்ந்த தயாநிதி (22) என்பதும் தனது தாய் கலைவாணியை இன்று காலை 5மணிக்கு அழைத்துக்கொண்டு கோபிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது தாயின் கைப்பையில் இருந்து தவறி விழுந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஆட்டோ டிரைவர்கள் முன்னிலையில் பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூ.50,000 பணத்தை அந்த வாலிபரிடம் ஒப்படைத்தார்.ஆட்டோ டிரைவரின் நேர்மையை பாராட்டி போலீசார் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.