உள்ளூர் செய்திகள்

பொது விநியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

Published On 2022-12-10 13:16 IST   |   Update On 2022-12-10 13:16:00 IST
  • விஜயாபுரம் நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
  • வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றனர்.

திருப்பூர் : 

திருப்பூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் பொது விநியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட விஜயாபுரம் நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் செல்போன் எண் மாற்றுவதற்கு 9 விண்ணப்பங்கள், முகவரி மாற்றத்திற்கு 5 விண்ணப்பங்கள், பெயர் நீக்கம் செய்வதற்கு 4 விண்ணப்பங்கள் மற்றும் பெயர் சேர்ப்பதற்கு 2 விண்ணப்பங்கள் என பொதுமக்களிடமிருந்து 21 விண்ணப்பங்கள் இன்று பெறப்பட்டது. காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை முகாம் நடைபெற்றது.வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றனர்.

Tags:    

Similar News