உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திப்பு போராட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம். 

காதுகேளாதோர் கூட்டமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம்

Update: 2022-07-01 11:40 GMT
  • மாதாந்திர உதவித் தொகையை 3000 ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும்
  • 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

திருப்பூர் :

காது கேளாதவருக்கான மாதாந்திர உதவித் தொகையை 3000 ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும் , காது கேளாதவருக்கான ஓட்டுநர் உரிமம் வழங்கும் முகாம் நடத்திட வேண்டும் , ஆவின் பாலகம் அமைத்துக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக திருப்பூர் மாவட்ட காதுகேளாதோர் நலச்சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் அடங்கிய வாசகங்களை கொண்ட பதாகைகளை ஏந்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News