கோப்புபடம்
சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விளைபொருட்களை இருப்பு வைத்து பொருளீட்டு கடன் பெறலாம்
- இருப்பு வைத்து பொருளீட்டுக் கடன் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 3 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
அவிநாசி :
சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலை உள்ளிட்ட விளைபொருட்களை இருப்பு வைத்து பொருளீட்டுக் கடன் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சந்திரமோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- அவிநாசி வட்டாரத்தில் மானாவாரி முறையில் 3 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலக்கடலை அறுவடையை விவசாயிகள் தொடங்கியுள்ளனா். அறுவடை செய்யப்படும் நிலக்கடலையை காய வைப்பதற்கு ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் 1 லட்சம் சதுர அடியல் உலா்கள வசதியுள்ளது.
மேலும், இ-நாம் திட்டத்தில் நடைபெறும் மறைமுக ஏலத்தில் பங்கேற்று தங்களது விளைபொருட்களை விற்பனை செய்துகொள்ளலாம். விவசாயிகள் எதிா்பாா்த்த விலை கிடைக்காவிட்டால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள கிடங்குகளில் இருப்பு வைத்துகொள்ளலாம்.
இவ்வாறு, இருப்பு வைக்கப்படும் நிலக்கடலை உள்ளிட்ட அனைத்து விளைபொருட்களுக்கும் விவசாயிகளுக்கு 5 சதவீத வட்டி விகிதத்திலும், வியாபாரிகளுக்கு 9 சதவீத வட்டி விகிதத்திலும் பொருளீட்டுக் கடன் வழங்கப்படுகிறது. இதனை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்க ப்பட்டுள்ளது.