கோப்புபடம்
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கவிதை-கட்டுரை போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு
- திருப்பூர் எல்.ஆர்.ஜி.மகளிர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது
- காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
திருப்பூர் :
2022-23ம் நிதியாண்டி ற்கு கல்லூரி மாண வர்களி டையே பேச்சாற்றலையும்,படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் திருப்பூர் மாவட்டம், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருப்பூர் எல்.ஆர்.ஜி.மகளிர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்க முதல் பரிசாக ரூ.10,000 ,இரண்டாம் பரிசாக ரூ.7,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000 என்ற வகையில் மொத்தம்ரூ.66,000 மதிப்புள்ள காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றி தழ்கள்வழங்கப்பட்டது.அதனை கலெக்டர் வினீத் தலைமையில், தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.ெப.சாமிநாதன் வழங்கினார். கவிதை போட்டியில் திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் இளங்கலைகணினி அறிவியல் இரண்டாமாண்டு பயிலும் மாணவி சத்திய பிரியா முதல்பரிசும், அவினாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை வணிகநிர்வாகவியல் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி அபாரணி இரண்டாம் பரிசும்,முத்தூர் கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரியில் இளங்கலை கணிதம்இரண்டாமாண்டு பயிலும் மாணவி சிவாத்தாள் மூன்றாம் பரிசும் பெற்றனர்.
கட்டுரைப் போட்டியில் திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக் கல்லூரியில்இளங்கலை ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி கீதாஸ்ரீ முதல் பரிசும்,திருமுருகன்பூண்டி ஏ.வி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலைவணிகவியல் கணினி பயன்பாடு பயிலும் மாணவி முத்துலட்சுமி இரண்டாம்பரிசும், திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் முதுகலை ஆங்கில இலக்கியம்முதலாமாண்டு பயிலும் மாணவி ஜெனிபர் ஜாஸ்மின் மூன்றாம் பரிசும் பெற்றனர்.பேச்சுப் போட்டியில் உடுமலைப்பேட்டை ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர்கல்லூரியில் முதுகலை வரலாறு முதலாமாண்டு பயிலும் மாணவி விஷ்ணுப்பிரியா, முதல் பரிசும், திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் கூட்டுறவு இரண்டாமாண்டுபயிலும் மாணவி சி.வி.ஜி, இரண் டாம் பரிசும், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் இளம் அறிவியல் வேதியியல் மூன்றாமாண்டு பயிலும் மாணவி பிருந்தா மூன்றாம் பரிசும் பெற்றனர்.இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.