உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

குற்றச்செயல்களை துணிவுடன் தடுக்க வேண்டும் - பெண்களுக்கு உதவி கலெக்டர் அறிவுறுத்தல்

Published On 2022-11-28 05:38 GMT   |   Update On 2022-11-28 05:38 GMT
  • குற்ற செயல்கள் நடைபெறும் போது துணிவுடன் எதிர்கொண்டு அதனை தடுத்திடவும் வேண்டும்.
  • பெண்கள் வளரும் போதே சுய மற்றும் அறிவார்ந்த செயலாக முடிவு எடுக்கக்கூடிய மன தைரியத்தையும் கொண்டவர்களாக சமுதாயத்தில் விளங்க வேண்டும்.

அவிநாசி : 

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தது.நிகழ்ச்சிக்கு, உதவி கலெக்டர் (பயிற்சி) பல்லவி வர்மா தலைமை வகித்து பேசியதாவது:-பெண் வன்கொடுமை சட்டத்தை பெண்கள் தெரிந்து கொள்வது எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஆண்களும் தெரிந்து கொள்ள வேண்டும். வன்கொடுமை சட்டங்களில் தண்டிக்கப்படும் ஆண்கள் தனது வாழ் நாளை இழந்து குடும்பத்தை இழந்து நிர்கதியாக நிற்க வேண்டிய சூழல் ஏற்படுகின்றது.

பெண்கள் வளரும் போதே சுய மற்றும் அறிவார்ந்த செயலாக முடிவு எடுக்கக்கூடிய மன தைரியத்தையும் கொண்டவர்களாக சமுதாயத்தில் விளங்க வேண்டும்.மேலும் குற்ற செயல்கள் நடைபெறும் போது துணிவுடன் எதிர்கொண்டு அதனை தடுத்திடவும் புகார் அளிக்க தயங்காமல் அரசு அறிவித்திருக்கும் புகார் எண்களை தொடர்பு கொண்டு தெரிவிப்பதன் மூலம் பெண்கள் சமுதாயம் பாதுகாக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News