உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.
பல்லடம் அருகே காளிவேலம்பட்டியில் நாளை மின் தடை
- பல்லடம் அருகேயுள்ள காளிவேலம்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- நாளை (5ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் இருக்காது
பல்லடம்:
பல்லடம் அருகேயுள்ள காளிவேலம்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (5ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு; பல்லடம் அண்ணாநகர், மின்நகர், காளிவேலம்பட்டி, லட்சுமிமில்,பெரும்பாளி, செம்மிபாளையம், சுக்கம்பாளையம், ஊஞ்சப்பாளையம், ராசக்கவுண்டம்பாளையம், சின்னியகவுண்டம்பாளையம், ரங்கசமுத்திரம், பணிக்கம்பட்டி, ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும்.
இவ்வாறு பல்லடம் வட்ட மின் பகிரமான செயற்பொறியாளர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.