உள்ளூர் செய்திகள்

அம்மன் வீதி உலா,  திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 

பல்லடம் அருகே சித்தம்பலம் காமாட்சி அம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா

Published On 2022-07-06 12:12 GMT   |   Update On 2022-07-06 12:12 GMT
  • விநாயகர் வழிபாடு, கணபதி, நவகிரக ஹோமம், மகாலட்சுமி, சரஸ்வதி பூஜைகளும் நடந்தது.
  • காமாட்சியம்மன் தினமும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்து வருகிறார்.

பல்லடம் :

பல்லடம் சித்தம்பலத்தில் காமாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது.இங்கு ஆண்டு தோறும் பொங்கல் பூச்சாட்டு விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தொடர்ந்து 6 வது ஆண்டு பொங்கல் பூச்சாட்டு விழா கடந்த 28ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதை தொடர்ந்து, விநாயகர் வழிபாடு, கணபதி, நவகிரக ஹோமம், மகாலட்சுமி, சரஸ்வதி பூஜைகளும் நடந்தன. விழாவில்கா மாட்சியம்மன் தினமும் சிறப்பு அலங்காரத்தில், வெவ்வேறு வடிவங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்து வருகிறார்.

நேற்று பொங்கல்,பூச்சாட்டு விழாவில் மாப்பிள்ளை அழைப்பு, திருக்கல்யாணம், தேர் பவனி உள்ளிட்டநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Tags:    

Similar News