உள்ளூர் செய்திகள்

2 மற்றும் 4 சக்கர வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தப்பட் டுள்ள காட்சி.

உடுமலை தாலுகா அலுவலகம் முன்பு தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் பொதுமக்கள் அவதி

Published On 2023-04-02 05:53 GMT   |   Update On 2023-04-02 05:53 GMT
  • தாலுகா அலுவலக வளாகத்துக்குள் கிளைச்சிறை, நீதிமன்றம், பொது சேவை மையம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது.
  • பொதுமக்கள் செல்வதற்கு கூட போதிய இடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

உடுமலை :

திருப்பூர் மாவட்டம் உடுமலை கச்சேரி வீதியில் அமைந்துள்ள தாலுகா அலுவலக வளாகத்துக்குள் கிளைச்சிறை,நீதிமன்றம்,பொது சேவை மையம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது.இந்தநிலையில் பல்வேறு சேவைகளை பெறுவதற்காக இங்கு வருபவர்கள் மட்டுமல்லாமல், வீதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு இடமில்லாதவர்கள் கூட தாலுகா அலுவலக வளாகத்துக்குள் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திச் செல்கின்றனர்.இதனால் இங்கு வரும் பொதுமக்கள் செல்வதற்கு கூட போதிய இடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதுதவிர தாசில்தார்,நீதிபதிகள் மற்றும் முக்கிய அதிகாரிகளின் வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.அத்துடன் கிளைச்சிறைக்கு அருகில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் சிறை வளாகத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

எனவே தாலுகா அலுவலகத்துக்கு எதிரில் வாகனங்களை நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

Similar News