உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

பி.ஏ.பி.,வெள்ளக்கோவில் கால்வாய் நீா் பாதுகாப்பு சங்க விவசாயிகள் 22-ந்தேதி பட்டினி போராட்டம்

Published On 2023-09-16 12:12 IST   |   Update On 2023-09-16 12:12:00 IST
  • பி.ஏ.பி., கால்வாய்களிலும் சமச்சீா் பாசனத்தை அமல்படுத்த வேண்டும்.
  • கால்வாய் சீரமைப்புப் பணிகளை நீண்டகால அடிப்படையில் தரமானதாக செய்ய வேண்டும்.

திருப்பூர்:

பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனக்கால்வாய் நீா் நிா்வாகத்தை சீரமைக்க வலியுறுத்தி 22-ந்தேதி தொடா் பட்டினி போராட்டம் நடத்தப்படுகிறது. இதற்கு ஆதரவு திரட்டும் வகையில் வெள்ளக்கோவில் பகுதியில் சேனாபதிபாளையம், வேலப்பநாயக்கன்வலசு, கல்லமடை, இலுப்பைக்கிணறு, அய்யனூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சங்கத்தலைவா் வேலுச்சாமி தலைமையில் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டப்பட்டது.

அப்போது சங்க நிா்வாகிகள் கூறியதாவது:-

மற்ற பகுதிகளில் உள்ளதை போல வெள்ளக்கோவில் பகுதி பி.ஏ.பி., கால்வாய்களிலும் சமச்சீா் பாசனத்தை அமல்படுத்த வேண்டும். கால்வாய்களில் நீா் மாசுபாடு, நீா் திருட்டை தடுக்க வேண்டும். கால்வாய் சீரமைப்புப் பணிகளை நீண்டகால அடிப்படையில் தரமானதாக செய்ய வேண்டும். பி.ஏ.பி., நீா் பாசன விதிமுறைகள் மற்றும் நீதிமன்ற தீா்ப்பின்படி எங்களுக்கு உரிய தண்ணீரை வழங்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈா்க்கும் பொருட்டு 22-ந்தேதி பகவதிபாளையம் சங்க வளாகத்தில் விவசாயிகள் பங்கேற்கும் தொடா் பட்டினி போராட்டம் நடைபெற உள்ளது என்றனா்.

Tags:    

Similar News