உள்ளூர் செய்திகள்

சரத்.

சர்வதேச கபடி போட்டிக்கு பல்லடம் மில் தொழிலாளி மகன் தேர்வு

Published On 2022-08-01 06:56 GMT   |   Update On 2022-08-01 07:25 GMT
  • கடந்த 10 ஆண்டுகளாக கபடி பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
  • தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று இதுவரை 5 தங்க பதக்கம் பெற்றுள்ளேன்.

திருப்பூர் :

பல்லடம் கே.என்.,புரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 52), மில் தொழிலாளி. இவரது மகன் சரத் (20). கோவையிலுள்ள தனியார் கல்லூரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படிக்கிறார். கபடி போட்டியில் தீவிர பயிற்சி பெற்று வரும் இவர் சர்வதேச போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து சரத் கூறியதாவது:-

கடந்த 10 ஆண்டுகளாக கபடி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். தமிழக அணியில் உள்ள 8 வீரர்களில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நானும் ஒருவன். மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று இதுவரை 5 தங்க பதக்கம் பெற்றுள்ளேன்.சமீபத்தில் நேபாளத்தில் நடந்த சர்வதேச கபடி போட்டியிலும் பங்கேற்று தங்கம் வென்றேன். அடுத்த மூன்று மாதங்களில், தாய்லாந்தில் நடக்கவுள்ள தெற்கு ஆசிய போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளேன். பாதுகாப்பு படையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற விருப்பம் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய சர்வதேச போட்டிகளில் பங்கேற்றால் மட்டுமே சாதிக்க முடியும். அவ்வாறு பங்கேற்க ஆயிரக்கணக்கில் பணம் தேவை. மில் தொழிலாளியான அப்பாவுக்கு வருவாய் குறைவு என்பதால் அவரால் இவ்வளவு தொகை செலவழிக்க முடியாது. தன்னார்வலர்கள் பலரின் உதவியுடன் இதுவரை போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். அடுத்த 3 மாதத்தில் நடக்கவுள்ள தெற்கு ஆசிய போட்டியில் பங்கேற்க முடியுமா என்ற அச்சம் உள்ளது என்கிறார் சரத்.

Tags:    

Similar News