உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

செக் மோசடி வழக்கில் பல்லடம் நகர தி.மு.க. செயலாளருக்கு பிடிவாரன்ட்

Published On 2023-05-20 05:19 GMT   |   Update On 2023-05-20 05:19 GMT
  • ராஜேந்திரகுமார் ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை கொடுத்ததாக கூறப்படுகிறது.
  • விசாரணைக்கு ராஜேந்திரகுமார் ஆஜராகவில்லை எனக்கூறப்படுகிறது.

திருப்பூர் :

பல்லடம் பனப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் என்கிற சண்முகம்(வயது 52). தையல் கலைஞரான இவர் தி.மு.க.வில் கிளை நிர்வாகியாக உள்ளார்.

இவருக்கும் தற்போது நகர செயலாளராக இருக்கும் ராஜேந்திரகுமார் என்பவருக்கும் வரவு - செலவு நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2020 ம் ஆண்டு, அவசர தேவைக்காக சண்முகத்திடம் ரூ.5 லட்சத்தை ராஜேந்திரகுமார் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் பணத்தை திருப்பி தருமாறு சண்முகம் கேட்டுள்ளார். அப்போதும் அவர் பணத்தை திருப்பி தராததால் இதுகுறித்து முக்கிய பிரமுகர்களிடம் பேசி கடந்த 2022 ல் ராஜேந்திரகுமார் ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த காகோலையை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பியது. இதையடுத்து சண்முகம் பல்லடம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்ற போது விசாரணைக்கு ராஜேந்திரகுமார் ஆஜராகவில்லை எனக்கூறப்படுகிறது.

தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாததால், ராஜேந்திர குமாருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். வரும் ஜூன் 30-ல் விசாரணைக்கு கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

Tags:    

Similar News