உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பெயிண்டர் தற்கொலை

Update: 2023-03-30 10:38 GMT
  • ஆனந்த ரூபன் மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார்.
  • பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பல்லடம் :

பல்லடம் அறிவொளி நகரைச் சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் ஆனந்த ரூபன் (வயது 48). பெயிண்டராக வேலை செய்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஆனந்த ரூபன் மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் தனிமையில் இருந்த அவர் சாணி பவுடரை கரைத்து குடித்து உள்ளார். இதில் மயக்கம் அடைந்தார். இதனைப் பார்த்த அவரது வீட்டினர் உடனடியாக மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்த ரூபன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News