உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

அரசு பள்ளிகளில் தேவையற்ற பொருட்களை அகற்ற உத்தரவு

Published On 2022-09-05 07:42 GMT   |   Update On 2022-09-05 07:42 GMT
  • மரச்சாமான்கள், இரும்பு பொருட்கள் வகுப்பறைகளில் காணப்படுகின்றன.
  • அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

திருப்பூர் :

தமிழகத்தில் பள்ளி கல்வி துறை சார்ந்த அலுவலகங்கள் மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன.கல்வித்துறை சார்ந்த அலுவலகங்களிலும், பள்ளிகளிலும் பழுதடைந்த மற்றும் உபயோகமற்ற மரச்சாமான்கள், இரும்பு பொருட்கள் காலங்கடந்து அலுவலகத்தில் உள்ள அறைகளிலும், வெளிப்புறங்களிலும் மற்றும் பள்ளிகளிலுள்ள வகுப்பறைகளிலும் காணப்படுகின்றன.

இதனால் அலுவலகங்களிலும், பள்ளிகளிலும், இடம்பற்றாக்குறை ஏற்படுகிறது. அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.சுற்றுச்சூழல் மட்டுமின்றி மாணவ, மாணவிகள் நலன்கள் பாதிப்பு ஏற்படுகிறது.பழுதடைந்த மரச்சாமான்கள் மற்றும் உபயோகமற்ற பொருட்கள் அகற்ற வேண்டியது மிகவும் அவசியமாகிறது.எனவே அப்பொருட்களை அகற்றுவதற்கு முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி அதனை அகற்ற ஏலம் விளம்பரம் மூலம் நடவடிக்கை மேற்கொண்டும், அதற்கான தொகையை உரிய அரசு கணக்கில் செலுத்தவும் திருப்பூர் உள்பட அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News