உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

திருப்பூர் அரசு கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறைகள் திறப்பு

Published On 2023-01-22 12:57 IST   |   Update On 2023-01-22 12:57:00 IST
  • முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக கூடுதல் வகுப்பறைகளை திறந்துவைத்தாா்.
  • சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் பங்கேற்று வகுப்பறைகளை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

திருப்பூர் : 

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி, எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கலைக் கல்லூரி ஆகியவற்றில் கூடுதல் வகுப்பறைகளை திறந்துவைத்தாா்.

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் ரூ.1 கோடியே 86 லட்சம் மதிப்பில் சுமாா் 11 ஆயிரம் சதுர அடியில் 3 தளங்களை கொண்ட 10 வகுப்பறைகளும், எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கலைக் கல்லூரியில் ரூ.3 கோடியே 74 லட்சம் மதிப்பில் சுமாா் 24 ஆயிரம் சதுர அடியில் 5 தளங்களை கொண்ட 18 வகுப்பறைகள் திறந்துவைக்கப்பட்டன.முன்னதாக திருப்பூா் சிக்கண்ணா மற்றும் எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கலைக்கல்லூரிகளில் நடைபெற்ற திறப்பு விழாவில் திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் பங்கேற்று வகுப்பறைகளை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

Tags:    

Similar News