உள்ளூர் செய்திகள்

ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்ட காட்சி.

திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., பள்ளியில் ஓணம் கொண்டாட்டம்

Published On 2022-09-09 05:55 GMT   |   Update On 2022-09-09 05:55 GMT
  • வண்ண மலர்களால் அத்தப்பூ கோலம் போடப்பட்டது.
  • கேரள மங்கையர்களாக மாணவிகளின் திருவாதிரை நடனம் நடைபெற்றது.

திருப்பூர் :

திருப்பூர் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. அறக்கட்டளை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி பலவிதமான வண்ண மலர்களால் அத்தப்பூ கோலம் போடப்பட்டது.

விழாவில் மாணவர்களுக்கு பகவான் மகாவிஷ்ணு பிறந்தநாளின் சிறப்பையும், வாமனர் அவதரித்த தினமான ஓணத்தின் சிறப்பினையும் மாணவி ரேஷ்மா எடுத்துரைத்தார். கேரள மங்கையர்களாக மாணவிகளின் திருவாதிரை நடனம் நடைபெற்றது. குழந்தைகள் பலர் கேரள பாரம்பரிய உடை அணிந்து மேடையை அலங்கரித்தனர். மக்கள் செழிப்பாக வளமோடு வாழ்கிறார்களா என்பதை காண சிறப்பு தோற்றத்துடன் மகாபலி சக்கரவர்த்தியின் வருகை நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

Tags:    

Similar News