உள்ளூர் செய்திகள்

மாணவிக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்ட காட்சி.

திருப்பூர் மாவட்ட கபடி கழகம் சார்பில் - அரசு கல்லூரி மாணவிக்கு தையல் எந்திரம்

Published On 2023-09-20 16:21 IST   |   Update On 2023-09-20 16:21:00 IST
  • அரசு கல்லூரி மாணவிக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • மாணவி உமாதேவிக்கு, படிப்புக்கு தேவையான தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

திருப்பூர் : 

திருப்பூா் மாவட்ட கபடி கழகம் சாா்பில், அரசு கல்லூரி மாணவிக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கபடி கழக தலைவா் கொங்கு முருகேசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஜெயசித்ரா சண்முகம், பொருளாளா் கன்னிமாா்ஸ் ஆறுச்சாமி, செய்தித் தொடா்பாளா் சிவபாலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் பல்லடம் அரசு கலைக் கல்லூரியில் காஸ்ட்யூம் டிசைன், பேஷன் டெக்னாலஜி பயிலும் திருப்பூா் கணபதிபாளையத்தைச் சோ்ந்த மாணவி உமாதேவிக்கு, படிப்புக்கு தேவையான தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. மாவட்ட நடுவா் குழு தலைவா் முத்துசாமி, மாவட்ட புரவலா் மகால ட்சுமி, ரத்தினசாமி, இணை ச்செயலாளா் செல்வராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினா் தேவராஜ், கௌரவ உறுப்பினா் பிரேமா மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Tags:    

Similar News