கோப்புபடம்
ஊத்துக்குளி அருகே கார் மோதி முதியவர் பலி
- ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கேதாராம் என்பவர் காரில் வேகமாக வந்ததாக தெரிகிறது.
- தலை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
ஊத்துக்குளி:
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள பல்லேகவுண்டம்பாளையம் கூனம்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 75). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாம்ராஜ்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கேதாராம் என்பவர் காரில் வேகமாக வந்ததாக தெரிகிறது.
அவர் வந்த கார், ராமசாமி மீது பயங்கரமாக மோதியதாக தெரிகிறது. இதில் கீழே விழுந்த அவருக்கு தலை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
உடனே இதுகுறித்து தகவல் அறிந்த அவருடைய மகன் வெள்ளியங்கிரி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராமசாமியை ஒரு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். அங்கு அவரை பரிசோதித்தகே டாக்டர்கள் ராமசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து கேதாராமை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.