உள்ளூர் செய்திகள்
கடைகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது எடுத்த படம்.
வெள்ளகோவில் கடைகளில் அதிகாரிகள் சோதனை
- அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய புகையிலை விற்கப்படுகிறதா என்பதை ஆய்வு மேற்கொண்டனர்.
- அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்கக் கூடாது என்று கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் சுகாதாரப் பணிகள் இயக்குநரின் நேர்முக உதவியாளர் செல்வராஜ், மாவட்ட நலக்கல்வியாளர் ராஜ்குமார், திருப்பூர் புகையிலை தடுப்பு பிரிவு அலுவலர் பிரவீன் மற்றும் வெள்ளகோவில் சுகாதார ஆய்வாளர் கதிரவன் ஆகியோர் நேற்று வெள்ளகோவில் நகர் பகுதி மற்றும் பள்ளி அருகே உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய புகையிலை விற்கப்படுகிறதா என்பதை ஆய்வு மேற்கொண்டனர்.
பின்பு புகையிலை பொருட்கள் மற்றும் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்கக் கூடாது என்று கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினர்.