உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

திருப்பூரில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-27 16:27 IST   |   Update On 2023-07-27 16:27:00 IST
  • எம்ஆர்பி., ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர செவிலியர்களாக பணியமர்த்த வேண்டும்.
  • தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்:

கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு புதிய நிரந்தர செவிலியர் பணியிடங்களை தோற்றுவித்து அதில் பணி நிரந்தரத்திற்கு காத்திருக்கும் எம்ஆர்பி., ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர செவிலியர்களாக பணியமர்த்த வேண்டும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தென்காசி,மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களில் சுகாதார மாவட்டத்திற்கு தேவையான மெண்டர் செவிலியர் பணியிடங்களை புதிதாக தோற்றுவித்து அதில் எம்ஆர்பி., ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர செவிலியர்களாக பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News