உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

என்.பி.எல்., கிரிக்கெட் 18-ந் தேதி கால் இறுதிப்போட்டி

Published On 2023-06-06 07:15 GMT   |   Update On 2023-06-06 07:15 GMT
  • 20 பின்னலாடை நிறுவன அணிகளுடன் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
  • லீக் போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்ற 8 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறுகின்றன.

திருப்பூர் :

என்.பி.எல்., எனப்படும் நிப்ட்-டீ பிரீமியர் லீக் கிரிக்கெட்போட்டி திருப்பூர் முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெற்றுவருகிறது. 20 பின்னலாடை நிறுவன அணிகளுடன் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

நேற்று முன்தினம் முதல் போட்டியில் போஸ் எக்ஸ்போர்ட்ஸ் - அமேஸிங் ஏக்ஸ்போர்ட்ஸ் கார்பரேஷன் அணிகள் மோதின. முதலில் ஆடிய போஸ் எக்ஸ்போர்ட்ஸ், 6 விக்கெட் இழப்புக்கு 106 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய அமேஸிங் 107 ரன்னுடன் வாகை சூடியது. அதிரடியாக விளையாடி 40 பந்தில் 73 ரன் எடுத்து தனது அணியின் வெற்றிக்கு கைகொடுத்த அமேஸிங் அணியின் பேட்ஸ்மேன் அழகர் சாமி, ஆட்டநாயகனாக தேர் வாகினார்.

வார்ஷா இன்டர்நேஷனல் - டெக்னோ ஸ்போட்ஸ்வேர் அணிகள் மோதிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வார்ஷா 12.3 ஓவரில் 62 ரன் எடுத்தது. அடுத்ததாக களமிறங்கிய டெக்னோ 65 ரன் எடுத்து வெற்றிபெற்றது. 2ஓவர் பந்து வீசி 3 விக்கெட் வீழ்த்திய டெக்னோ அணி பவுலர் இசாக் ராஜாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.வருகிற 11-ந்தேதியுடன் லீக் போட்டிகள் முடிவடைகின்றன. லீக் போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்ற8அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறுகின்றன. வருகிற 18 மற்றும் 25-ந் தேதிகளில் காலிறுதி போட்டிகள்,ஜூலை 2-ந் தேதி அரையிறுதி போட்டிகளும், 9-ந் தேதி இறுதிப்போட்டிகளும் நடைபெறுகின்றன.

Tags:    

Similar News