உள்ளூர் செய்திகள்
அமைச்சரிடம் விவசாயிகள் மனு அளித்தபோது எடுத்தபடம். 

வெள்ளகோவில் பி.ஏ.பி., பாசனத்தில் 2-ம் சுற்று தண்ணீர் வழங்க கோரி அமைச்சரிடம் விவசாயிகள் மனு

Published On 2023-11-05 16:50 IST   |   Update On 2023-11-05 16:50:00 IST
  • நகர செயலாளர் சபரிமுருகானந்தன் மற்றும் வெள்ளகோவில் கிளை வாய்க்கால் பிஏபி., நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.
  • பகிர்மான வாய்க்கால் அனைத்தையும் நிர்வாகம் பராமரிப்பு செய்து தடையின்றி தண்ணீர் வழங்க வழிவகை செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.

முத்தூர்:

வறட்சியின் காரணமாக வெள்ளகோவில் பி.ஏ.பி நான்காம் மண்டலத்திற்க்கு இரண்டாம் சுற்று தண்ணீர் ஏழு நாள் 4.7 அடி தண்ணீர் விடக்கோரி அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் பி.ஏ.பி விவசாயிகள் சங்கத்தினர் நேற்று ஆய்வு மாளிகையில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அப்போது வெள்ளகோவில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சந்திரசேகரன், அவைத்தலைவர் தண்டபாணி, பகிர்மான குழு தலைவர் பாலசுப்பிரமணியம், பாசன விவசாய சங்க தலைவர் தங்கராஜ், காங்கயம் ஒன்றிய செயலாளர்கள் சிவானந்தன், கருணைபிரகாஷ், காங்கயம் நகர செயலாளர் சேமலையப்பன், முன்னாள் பொதுக்குழு மோகனசெல்வம், வெள்ளகோவில் நகர செயலாளர் சபரிமுருகானந்தன் மற்றும் வெள்ளகோவில் கிளை வாய்க்கால் பிஏபி., நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

காங்கயம் வெள்ளகோவில் பி.ஏ.பி பாசன விவசாயிகள் அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

பி.ஏ.பி பாசனத்திற்கு வெள்ளகோவில் கிளை வாய்க்காலில் ஒருமுறை சுற்றுக்கு 5 நாள் முறை வைத்து 4.5அடி தண்ணீர் பெற்று தந்த தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்து க்கொள்கிறோம். வறட்சியின் காரணமாக நான்காம் மண்டலத்திற்கு இரண்டாம் சுற்று தண்ணீர் ஏழு நாள் 4.7 அடி தண்ணீர் பெற்று தருமாறு கேட்டுக்கொள்கிறோம். ஒன்று முதல் நான்கு வரை உள்ள அனைத்து மண்டலத்துக்கும் ஒரு சுற்றுக்கு 7 நாள் வீதம் 4.7 அடி தண்ணீர் கிடைக்க நிரந்தர ஆணை பெற்று தருமாறு கேட்டுக்கொள்கிறோம். பகிர்மான வாய்க்கால் அனைத்தையும் நிர்வாகம் பராமரிப்பு செய்து தடையின்றி தண்ணீர் வழங்க வழிவகை செய்யுமாறு கேட்டு கொள்கிறோம். பி.ஏ.பி., பிரதான வாய்க்காலில் நடைபெறும் தண்ணீர் திருட்டை தடுத்து மதகு கதவுகளை சரிசெய்து சேதமின்றி தண்ணீர் வழங்க ஆவண செய்யுமாறு கேட்டுகொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News