உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

null

போக்குவரத்து நெரிசலை தீர்க்க மடத்துக்குளம் சாலையில் தடுப்புகள் அமைக்கப்படுமா?

Published On 2022-10-17 13:14 IST   |   Update On 2022-10-17 13:19:00 IST

 மடத்துக்குளம்:

கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கணியூர், கொமரலிங்கம் ரோடு சந்திக்கும் நால்ரோடு சந்திப்பு மடத்துக்குளத்தில் அமைந்துள்ளது. இந்த சந்திப்பு பகுதியையொட்டி, மடத்துக்குளம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் வரிசையாக அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில், கனரக வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் மற்றும் இதர வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது.

இதனால் கணியூர் மற்றும் கொமரலிங்கம் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள், சந்திப்பு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் இணையும் போது நெரிசல் ஏற்படுகிறது.

குறிப்பாக கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் திரும்பும் போது, தேசிய நெடுஞ்சாலையில், வரும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.மேலும் இருசக்கர வாகனங்கள் அப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க சிரமப்பட வேண்டியுள்ளது. அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. தற்காலிக தீர்வாக, சந்திப்பு பகுதியில், டிவைடர் வைத்தும் எவ்வித பலனும் இல்லை. நால்ரோடு பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை, தேசிய, மாநில நெடுஞ்சாலைத்துறையினர் கண்டுகொள்ளவில்லை.

இதே போல் சந்திப்பு பகுதியில், தேசிய நெடுஞ்சாலையி ல் குறிப்பிட்ட தூரத்திற்கு, இரு புறங்களிலும் ஆக்கிரமிப்பை அகற்றி சென்டர் மீடியன் அமைத்தால், நெரிசலை தவிர்க்க முடியும். விபத்துகளும் ஏற்படாது.நெடுஞ்சாலைத்துறையினர், மடத்துக்குளம் பேரூராட்சி நிர்வாகம், வருவாய்த்துறையினர், போலீசாரை ஒருங்கிணைத்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Similar News