உள்ளூர் செய்திகள்

அவினாசி கோவிலில் தேவாரம் பாடிய நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி. 

ராஜராஜ சோழன் சதய விழா - அவிநாசி கோவிலில் தேவாரம் பாடி புகழாரம்

Published On 2023-10-27 11:04 GMT   |   Update On 2023-10-27 11:04 GMT
  • திருஞானசம்மந்தர், அப்பர், சுந்தரர் அருளிய திருப்பதிகம் முற்றோதல் செய்யப்பட்டது.
  • விநாயகர் பெருமானுக்கும், நால்வர் பெருமக்களுக்கும் அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

அவிநாசி:

தேவாரத்தை மீட்டெடுத்த திருமுறை கண்ட ராஜ ராஜ சோழ மாமன்னனின் 1038 வது ஐப்பசி சதய பெருவிழா அவிநாசி கோவிலில் நடைபெற்றது.அவிநாசியிலுள்ள லிங்கேஸ்வரர் கோவில் வளாகத்திலுள்ள ஸ்ரீகருணாம்பிகை அம்மன் கலையரங்கில், ராஜராஜ சோழனின் 1038 சதயப்பெருவிழா நடைபெற்றது. இதையொட்டி திருஞானசம்மந்தர், அப்பர், சுந்தரர் அருளிய திருப்பதிகம் முற்றோதல் செய்யப்பட்டது.

ஓதிய பலனை தரக்கூடிய 25 திருப்பதிகங்கள் கொண்ட தேவார திரட்டு பண்ணொன்ற விண்ணப்பித்தல், திருமுறை கலாநிதி கரூர் குமாரசாமிநாத தேசிகர் தலைமையில், ஓதுவா மூர்த்திகள் மற்றும் பக்க வாத்திய கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டு ஓதப்பட்டது.

முன்னதாக விநாயகர் பெருமானுக்கும், நால்வர் பெருமக்களுக்கும் அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான சிவனடியார்கள் பங்கேற்று முற்றோதல் செய்தனர். நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியன், அறங்காவலர்கள் பொன்னுசாமி, ரவிபிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News