உள்ளூர் செய்திகள்

காலி மதுபான பாட்டில்கள் வீசப்பட்டு கிடக்கும் காட்சி. 

பல்லடம் நகராட்சி அலுவலக வளாகத்தில் காலி மதுபான பாட்டில்களை வீசிய கும்பல்

Published On 2023-06-11 13:37 IST   |   Update On 2023-06-11 13:37:00 IST
  • பல்லடம் நகராட்சி அலுவலக சுகாதார வளாக பகுதியில் காலி மதுபான பாட்டில்கள் போடப்பட்டுள்ள காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
  • கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

பல்லடம்:

பல்லடம் நகராட்சி அலுவலக சுகாதார வளாக பகுதியில் காலி மதுபான பாட்டில்கள் போடப்பட்டுள்ள காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அங்கு வைக்கப்பட்டுள்ள பழைய விளம்பர பதாகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தின் மீது காலி மது பாட்டில்கள் வீசப்பட்டுள்ள சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நகராட்சி ஆணையாளரிடம் கேட்டபோது விடுமுறை நாளில் மதுபான பாட்டில்கள் போட்டது யார் என்பது தெரியவில்லை. கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News