உள்ளூர் செய்திகள்

ராமசாமி கோவிலில் திரண்ட பக்தர்கள். 

பல்லடத்தில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி ராமசாமி கோவிலில் திரண்ட பக்தர்கள்

Published On 2022-10-08 07:38 GMT   |   Update On 2022-10-08 07:38 GMT
  • அதிகாலை முதலே அதிகளவில் மக்கள் குடும்பத்துடன் வந்தனர்.
  • கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தற்காலிக பஸ் நிறுத்தம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் கோவில்பா ளையத்தில் ராமசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 500 ஆண்டு பழமை வாய்ந்தது. புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதே போன்று இன்று அதிகாலை முதலே அதிகளவில் மக்கள் குடும்பத்துடன் வந்தனர். இதனையொட்டி கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தற்காலிக பஸ் நிறுத்தம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக குடிநீர், மருத்துவ குழு, தீயணைப்புத்துறை வசதி ஆகிய சிறப்பான ஏற்பாடுகள் பரம்பரை அறங்காவலர்கள் குழு தலைவர் பி.எம். கிருஷ்ணகுமார் தலைமையில் செய்யப்ப டுகிறது. சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர். மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்த பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு சவுமியா தலைமையில், அவினாசிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். ராமபிரான் வந்து சென்ற இடம் என்பதால் இந்த கோவில் கிராமத்து வழக்கப்படி ராமசாமி கோவில் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News