உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.
அவினாசியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்
- மார்ச் 1 ந்தேதி முதல் மார்ச் 10 ந்தேதி வரை மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
- ஊராட்சி செயலர் எ.மணிகண்டன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சே.என். சாந்தமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அவினாசி:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் மார்ச் 1 ந்தேதி முதல் மார்ச் 10 ந்தேதி வரை மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் அவினாசி ஒன்றியம், நடுவச்சேரி ஊராட்சி மன்ற அலு வலகத்தில் நடைபெற்ற முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் கே.சி வரதராஜன் தலைமையில் மூன்று மாற்றுதிறனாளிகள் பயன்பெறும் வகையில் அடையாள அட்டை வழங்க ப்பட்டது. உடன் ஊராட்சி செயலர் எ.மணிகண்டன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சே.என். சாந்தமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.