உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

திருப்பூரில் பயிற்சி முடித்த காவலர்கள் 97 பேர் பணிக்கு திரும்பினர்

Published On 2022-10-20 07:27 GMT   |   Update On 2022-10-20 07:27 GMT
  • துப்பாக்கி சுடுதல், கலவர தடுப்பு, யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தது.
  • பயிற்சி நிறைவு பெற்ற, 97 போலீசாரும் கோவையில் உள்ள சிறப்பு காவல் படைக்கு செல்ல உள்ளனர்.

திருப்பூர்:

திருப்பூர் காங்கயம் ரோடு நல்லூரில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் தற்காலிக போலீஸ் பயிற்சி பள்ளி உள்ளது. இங்கு தேர்ச்சி பெற்ற 97 இரண்டாம் நிலை போலீசார் கடந்த மார்ச் மாதம் முதல் பயிற்சி மேற்கொண்டு வந்தனர். இவர்களுக்கு கவாத்து, சட்டப் பயிற்சி, துப்பாக்கி சுடுதல், கலவர தடுப்பு, யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 7மாதமாக அளிக்கப்பட்ட பயிற்சி நிறைவு பெற்றது.

பயிற்சி நிறைவு விழா மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடந்தது. திருப்பூர் போலீஸ் கமிஷனர் பிரபாகரன், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கோவை சரக டி.ஐ.ஜி., முத்துசாமி, திருப்பூர் எஸ்.பி., சஷாங் சாய் ஆகியோர் பங்கேற்றனர். போலீசாரின் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.மேலும், பயிற்சி நிறைவு பெற்ற, 97 போலீசாரும் கோவையில் உள்ள சிறப்பு காவல் படைக்கு செல்ல உள்ளனர்.

Tags:    

Similar News