உள்ளூர் செய்திகள்

 சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளியின் ஆசிரிய-ஆசிரியைகள் பாராட்டிய போது எடுத்த படம்.

மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உடுமலை பள்ளி மாணவர்கள் தகுதி

Published On 2023-11-21 11:46 GMT   |   Update On 2023-11-21 11:46 GMT
  • அரசுப்பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை வெளிக்கொண்டு வரும் நோக்கில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டது.
  • பஞ்சாயத்து தலைவி ஆனந்தவேணி மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வாழ்த்தினர்.

உடுமலை:

உடுமலை வட்டார அளவில் தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசுப்பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை வெளிக்கொண்டு வரும் நோக்கில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில் உடுமலை அருகே உள்ள மலையாண்டிபட்டிணம் அரசு உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த 48 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். 25 பேர் இசை, நடனம், ஓவியம், வில்லுப்பாட்டு மற்றும் ஆங்கிலம், தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் சிற்பம் உருவாக்குதல் போன்ற பிரிவுகளில் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்.

பின்னர் மாவட்ட அளவில் நடந்த போட்டிகளில் முதல் 3 இடங்களை பெற்ற 13 மாணவர்களில் ஆர் ஹரிசுதன் (நவீன ஓவியம்), எஸ்.விஜய்கிருஷ்ணா ( எதிர்கால கனவு), எம். ஆசியா சுஹனா ( ஆங்கில பேச்சு போட்டி) ஆகிய மூன்று மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

இப்போட்டிகளுக்கு மாணவர்களை தயார்படுத்தி, பயிற்சி வழங்கிய ஆசிரியர்கள் கஸ்தூரி பானு, சிவசுப்பிரமணியன், மகேந்திரன், மகேஸ்வரி ஆகியோரை பள்ளித் தலைமை ஆசிரியர் சதீஷ்குமார், பஞ்சாயத்து தலைவி ஆனந்தவேணி மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வாழ்த்தினர்.

Tags:    

Similar News