உள்ளூர் செய்திகள்
தீக்குளிக்க முயன்ற வாலிபர். 

பல்லடம் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு

Published On 2023-05-21 13:30 IST   |   Update On 2023-05-21 13:31:00 IST
  • தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியை சேர்ந்த காளிராஜன் என்ற வாலிபர் வந்தார்.
  • போலீசார், சிங்காநல்லூரில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தினர்.

பல்லடம்:

பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு நேற்று மாலை தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியை சேர்ந்த காளிராஜன் என்ற வாலிபர் வந்தார். அங்கு பணியில் இருந்த போலீசாரிடம், தான் சிங்காநல்லூரில் வேலை செய்வது வருவதாகவும், தனக்கு முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை எனவும் புகார் கொடுக்க வந்ததாக கூறினார். அதற்கு போலீசார், சிங்காநல்லூரில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தினர். இதனையடுத்து புலம்பிக் கொண்டே சென்ற அவர், திடீரென்று போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்தார். உடனே போலீசார் அவரை மீட்டு காப்பாற்றினர். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 

Tags:    

Similar News