உள்ளூர் செய்திகள்
கோப்புபடம். 

காங்கயம் பகுதி விவசாய நிலங்களில் செழித்து வளர்ந்துள்ள சோளத்தட்டுக்கள்- விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2022-09-13 17:26 IST   |   Update On 2022-09-13 17:26:00 IST
  • கால்நடைகளின் முக்கிய தீவனமான சோளம் விதைக்கிறார்கள்.
  • சோளத்தட்டுகள் பொதுவாக வளர்வதற்கு தண்ணீர் பாய்ச்சுவதில்லை.

காங்கயம்:

கால்நடைகளுக்கு தீவன சோளம், தீவன மக்காச்சோளம், கொழுக்கட்டை, புல், கம்பு, நேப்பியர் புல், எருமைப்புல் போன்றவை பயறு வகை அல்லாத புல் வகையாகும். இந்த வகையில் சோளத்தட்டுகள் கால்நடைகளுக்கு மழை பெய்யாத வறட்சியான காலங்களில் அளிக்கப்படும் முக்கிய தீவனம் ஆகும்.

விவசாயிகள் மழை பெய்யும் காலங்களில் தங்கள் விவசாய நிலங்களில் உளவு செய்து, அதில் கால்நடைகளின் முக்கிய தீவனமான சோளம் விதைக்கிறார்கள். பின்பு நன்கு வளர்ந்த பின்பு அறுவடை செய்யப்படுகிறது. அறுவடை செய்த சோளத்தட்டுகளை போர் அமைத்து சேமித்து வைத்து மழை பெய்யாத வறட்சியான காலங்களில் கறவை மாடுகளுக்கு உணவாக அளிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் காங்கயம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அண்மையில் பெய்து வரும் தொடர் மழையால் விவசாயிகள் தங்கள் ஈரப்பதமான நிலங்களில் உழவு செய்து சோளங்களை பயிரிட்டனர். தற்போது இந்த சோளங்கள் நன்கு செழித்து சோளத்தட்டுகளாக வளரத்தொடங்கியுள்ளது. இதனால் சோளங்களை பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விவசாயிகள் கூறுகையில், சோளத்தட்டுகள் பொதுவாக வளர்வதற்கு தண்ணீர் பாய்ச்சுவதில்லை. மழை பெய்து நிலம் ஈரப்பதம் ஆனாலே சோளம் தானாக வளர்ந்து விடும். மேலும் ஓரளவு வளர்ந்த பின்பு அவ்வப்போது மழை பெய்தால் சோளத்தட்டுகள் நன்கு செழித்து வளர ஆரம்பித்துவிடும். இதனால் கால்நடைகளுக்கு தீவனப்பிரச்சினைகள் ஏற்படும் காலங்களில் இந்த சோளத்தட்டுகளை வைத்து ஓரளவு சமாளித்து விடமுடியும் என்று விவசாயிகள் கூறினர்.

Tags:    

Similar News