உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தலைமையில் அரசு அலுவலர்கள் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றபோது எடுத்தபடம். 

கலெக்டர் தலைமையில் அரசு அலுவலர்கள் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு

Published On 2022-11-15 07:39 GMT   |   Update On 2022-11-15 07:40 GMT
  • குழந்தைகள் நல அலுவலர் நித்யா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
  • அனைத்துத்துறை அலுவலர்கள் உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அனைத்துத்துறை அலுவலர்கள் உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.

குழந்தைகளுக்கு எதிராக நிகழக்கூடிய அனைத்து தீங்குகள் மற்றும் தீங்கிழைப்பவர்களுக்கு எதிராக குரல் கொடுப்பேன் எனவும், குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் இல்லாத குழந்தை நேய சமூகத்தை உருவாக்குவதோடு குழந்தைகளை மரியாதையோடும், மதிப்போடும், தோழமையோடும் நடத்துவேன் எனவும்... குழந்தைகளுக்கு உதவி தேவைப்படும் போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகினை தொடர்பு கொள்வேன் எனவும், 1098 ஐ அழைப்பேன் எனவும் உறுதி கூறுகிறேன். இவ்வாறு அனைத்துத்துறை அலுவலர்கள் உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், குழந்தைகள் நல அலுவலர் நித்யா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

Tags:    

Similar News