உள்ளூர் செய்திகள்
கோப்புபடம். 

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள திருப்பூர் சுகாதாரத்துறை வேண்டுகோள்

Published On 2022-07-17 07:11 GMT   |   Update On 2022-07-17 07:11 GMT
  • உடுமலை, காங்கயம், பல்லடம், அவிநாசி, மடத்துக்குளம் உள்ளிட்ட அனைத்து தாலுகா அளவிலான அரசு மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடந்தது.
  • தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. மக்கள் வந்தால் சரி என்றனர்.

திருப்பூர்:

தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செலுத்தப்பட்டு வந்த கொரோனா தடுப்பு பூஸ்டர் தடுப்பூசி நாட்டின் 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு 75 நாட்களுக்கு இலவசமாக செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.அதன்படி, திருப்பூர் கலெக்டர் அலுவலகம், தலைமை அரசு மருத்துவமனை, தாராபுரம், உடுமலை, காங்கயம், பல்லடம், அவிநாசி, மடத்துக்குளம் உள்ளிட்ட அனைத்து தாலுகா அளவிலான அரசு மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடந்தது.

இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் 10 லட்சம் பேருக்கு பூஸ்டர் செலுத்த வேண்டியுள்ளது. 2 தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் அல்லது 26வாரம் நிறைவு பெற்றவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டிருக்கும். அவர்கள் தங்கள் ஆதார் அட்டை, குறுஞ்செய்தி காண்பித்து பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம். வெளிநாடு செல்வோர் இருதவணை தடுப்பூசி செலுத்தி 90 நாட்கள் ஆனால் பூஸ்டர் செலுத்திக்கொள்ளலாம். கைவசம் 2.5 லட்சம் தடுப்பூசி உள்ளது. தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. மக்கள் வந்தால் சரி என்றனர்.

Tags:    

Similar News