உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு கற்றல் பயிற்சி - 17-ந்தேதி நடக்கிறது

Published On 2022-12-14 07:42 GMT   |   Update On 2022-12-14 07:42 GMT
  • நன்கு அனுபவமுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் என இருவர் கருத்தாளர்களாக செயல்பட வேண்டும்.
  • நன்கு அனுபவமுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் என இருவர் கருத்தாளர்களாக செயல்பட வேண்டும்.

திருப்பூர்:

இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் குறைதீர் கற்றல் பயிற்சி குறுவளமைய அளவில் வருகிற 17-ந் தேதி நடக்கிறது. குறைதீர் கற்றல் பயிற்சிக்கு ஒவ்வொரு குறுவளமையத்துக்கு, நன்கு அனுபவமுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் என இருவர் கருத்தாளர்களாக செயல்பட வேண்டும். இவர்களுக்கு வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் நாளை 15-ந் தேதி பயிற்சி அளிக்க வேண்டும். அதன்பின் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு பயிற்சி 17ந் தேதி அன்று குறுவளமைய அளவில் பயிற்சி சிறப்பாக நடத்தப்பட வேண்டும். ஒரு பயிற்சியாளர் மற்றும் பயிற்றுனருக்கு நாள் ஒன்றுக்கு, 130 ரூபாய் வழங்கப்படும். தன்னார்வலர் அனைவருக்கும் பயணப்படி அவரவர் வங்கி கணக்கிற்கு வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என இல்லம் தேடி கல்வி திட்ட சிறப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் முறையாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News