உள்ளூர் செய்திகள்
மர்ம விலங்குகளால் கடித்து குதறப்பட்டு பலியான ஆட்டை படத்தில் காணலாம். 

விளைநிலங்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளால் விவசாயிகள் கவலை

Published On 2023-06-04 03:39 GMT   |   Update On 2023-06-04 03:40 GMT
  • ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை அமராவதி வனப்பகுதி எல்லையில் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் அமைந்துள்ளன.
  • காட்டுப்பன்றிகள் இனப்பெருக்கம் காரணமாக அவை கிராமங்கள் வரை வர துவங்கியுள்ளன.

உடுமலை:

ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை அமராவதி வனப்பகுதி எல்லையில் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள நிலங்களில் நிலக்கடலை, தென்னை, மா, மொச்சை உள்ளிட்ட பல்வேறு விவசாய சாகுபடிகள் மேற்கொள்ளப்படுகின்ற ன. வனத்திலிருந்து வெளியேறும் காட்டுப் பன்றிகள்,யானை,மான் கூட்டம் விளைநிலங்களில் தொடர் சேதம் ஏற்படுத்தி வருகிறது. நிலக்கடலை, பொச்சை பயிர்களில் செடிகளை முழுமையாக அழித்து பொருளாதார சேதம் ஏற்படுத்தி வருகின்றன.

வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுப் பன்றிகள் கூட்டம் மழை நீர் ஓடைகளில் பதுங்கி இரவு நேரங்களில் விளைநிலங்களுக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்துவதால் அவற்றை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் திணறுகின்றனர்.

வல்லக்குண்டாபுரம், ஜல்லிக்கட்டு,கொங்கு ரார்குட்டை, பருத்தியூர், மானுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டுப் பன்றிகள் தொல்லையால் விவசாயிகள் சாகுபடியை கைவிடும் நிலைக்குகூட தள்ளப்பட்டுள்ளனர்.

காட்டுப்பன்றிகள் இனப்பெருக்கம் காரணமாக அவை கிராமங்கள் வரை வர துவங்கியுள்ளன. பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி வரும் காட்டு பன்றிகளை மீண்டும் வனப்பகுதியில் விரட்ட வேண்டும். அவற்றை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் சார்பில் போராட்டமும்நடந்தது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வனவிலங்கு களால் சாகுபடி பாதிக்கும் போது நிவாரணம் வழங்க வனத்துறையினர் காலதாமதம் செய்கின்றனர். மேலும் பாதிப்புக்கும் வனத்துறை வழங்கும் நிவாரணத்திற்கும் சம்பந்தமே இல்லை. எனவே கிராம விவசாயிகளை உள்ளடக்கி மன உரிமை குழு கூட்டங்களை குறிப்பிட்ட இடைவெளியில் நடத்த வேண்டும். விவசாயிகளிடம் கருத்து கேட்டு அதற்கு ஏற்ப நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு உடு–ம–லை–யை–ய–டுத்த பெரி–ய–கோட்டை, தாரா–பு–ரம் சாலை உள்–ளிட்ட பகு–தி–களில் நூற்–றுக்–க–ணக்–கான ஆடு–கள் மர்ம விலங்–கு–க–ளால் கடித்–துக் குத–றப்–பட்–டன.இதன் தொடர்ச்–சி–யாக கடந்த சில மாதங்–க–ளாக உடு–மலை, மடத்–துக்–கு–ளம் பகு–தி–களில் மீண்–டும் ஆடு–கள், கன்–று–கள் உள்–ளிட்–டவை கடித்து குதறி கொல்–லப்–பட்டு வரு–கின்–றன. இதனை தொடர்ச்–சி–யாக கண்–கா–ணித்து வரும் வனத்–து–றை–யி–னர், கால்–ந–டை–களை வேட்–டை–யா–டும் மர்ம விலங்–கு–கள் வன விலங்–கு–கள் இல்லை என்–பதை உறு–திப்–ப–டுத்–தி–யுள்–ள–னர். மடத்–துக்–கு–ளத்–தை–ய–டுத்த சாம–ரா–யப்–பட்டி உள்–ளிட்ட ஒரு–சில பகு–தி–களில் கூட்–ட–மாக வரும் நாய்–கள் மனி–தர்–க–ளின் கண் முன்னே ஆடு–களை வேட்–டை–யா–டி–யுள்–ளது. மேலும் அவை மனி–தர்–க–ளை–யும் கடிக்–கத் துரத்–தி–யுள்–ளது. இந்–த–நி–லை–யில் துங்–காவி அரு–கி–லுள்ள மலை–யாண்–டிப்–பட்–டி–னம் பகு–தி–யில் பொன்–னுச்–சாமி, ஈஸ்–வ–ர–சாமி ஆகிய விவ–சா–யி–க–ளின் தோட்–டத்–துக்–குள் நள்–ளி–ர–வில் நுழைந்த நாய்–கள் 2 ஆடு–களை கடித்–துக் கொன்–றுள்–ளன.தொடர்ச்–சி–யாக ரத்த வேட்–டை–யாடி வரும் நாய்–க–ளைப் பிடிக்க நட–வ–டிக்கை எடுக்க வேண்–டும் என்–பது விவ–சா–யி–க–ளின் கோரிக்–கை–யாக உள்–ளது.

Tags:    

Similar News