உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

வெல்லத்துக்கு போதிய விலை கிடைக்காததால் உடுமலை உற்பத்தியாளர்கள் பாதிப்பு

Published On 2022-07-23 12:27 IST   |   Update On 2022-07-23 12:27:00 IST
  • உற்பத்தியாகும் வெல்லத்துக்கு முன்பு கேரளாவில் நல்ல ‘கிராக்கி’ இருந்தது.
  • கூடுதல் வரி விதிப்பை தவிர்த்தால் பயனுள்ளதாக இருக்கும்.

மடத்துக்குளம்:

உடுமலை ஏழு குள பாசனப்பகுதிகளில்கரும்பு சாகுபடி பிரதானமாக உள்ளது.இங்குள்ள விவசாயிகள், விளைநிலங்களில் ஆலை அமைத்து, வெல்லம் உற்பத்தியில் ஈடுபட ஆர்வம் காட்டுகின்றனர். சிலர் ஒப்பந்த அடிப்படையில் வெல்லம் உற்பத்திக்கு கரும்பு விற்பனை செய்கின்றனர். இங்கு உற்பத்தியாகும் வெல்லத்துக்கு முன்பு கேரளாவில் நல்ல 'கிராக்கி' இருந்தது.

குறிப்பாக ஓணம் சீசனை இலக்காக வைத்து ஏழு குள பாசனப்பகுதி மற்றும் அமராவதி பாசனப்பகுதிகளில், வெல்லம் உற்பத்தி செய்வது வழக்கம்.பல்வேறு காரணங்களால் கேரளாவில், தமிழகத்தில் உற்பத்தியாகும் வெல்லத்துக்கு வரவேற்பு குறைந்தது.ஓணம் சீசனிலும், அம்மாநில வியாபாரிகள் கொள்முதலுக்கு ஆர்வம் காட்டவில்லை.இவ்வாறு தொடர் பாதிப்பு ஏற்பட்டாலும், உற்பத்தியை முழுமையாக கைவிட முடியாத நிலை விவசாயிகளுக்கும், உற்பத்தியாளர்களுக்கும் உள்ளது.

தற்போதைய சீசனில் 30 கிலோ கொண்ட வெல்ல சிப்பம் 1,140 ரூபாய்க்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.

இது குறித்து வெல்லம் உற்பத்தியாளர்கள் கூறியதாவது: -

வெல்லத்துக்கான உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது. கரும்பு சாறு எடுத்தல், பாகு தயாரித்தல் பணிக்கு ஆட்கள் கிடைப்பதில்லை.கரும்பு வெட்டும் பணிக்கும் பிற மாவட்டங்களில், இருந்து ஆட்களை அழைத்து வருகிறோம். இதனால் செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் விலை அதிகரிக்காமல், குறைந்து வருகிறது.பிற பகுதிகளுக்கு விற்பனைக்காக வெல்லத்தை எடுத்துச்செல்லும் போது வரி விதிக்கப்படுகிறது. இத்தொழிலை காப்பாற்ற வெல்லத்துக்கு ஆதார விலை நிர்ணயித்து ரேஷன் கடைகள் வாயிலாக விற்பனை செய்ய வேண்டும். கூடுதல் வரி விதிப்பை தவிர்த்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர். 

Tags:    

Similar News