உள்ளூர் செய்திகள்

கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற காட்சி.  

திருப்பூர் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக 1,081 பள்ளிகளில் 75,482 மாணவர்களுக்கு காலை உணவு- கலெக்டர் தகவல்

Published On 2023-08-23 04:07 GMT   |   Update On 2023-08-23 04:07 GMT
  • தமிழ்நாடு முதலமைச்சரால் 25.8.2023 அன்று இரண்டாம் கட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தொடங்கி வைக்கப்படவுள்ளது.
  • குறித்த நேரத்தில் உணவு வழங்குவது குறித்தும், தேவையான நடவடிக்கைகளை துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறு த்தப்பட்டுள்ளது.

 திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் செயல்படுத்து வது தொடர்பான ஆலோச னைக்கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது.இதில் கலெக்டர் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக முதலமை ச்சரின் காலைஉணவுத்திட்டம் செயல்படுத்துவது தொட ர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த திட்டத்தின் நோக்கமானது மாணவ, மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்யவும், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்க ப்படாமல் இருத்தலை உறுதி செய்யவும், ஊட்டச்சத்து நிலையை உயர்த்தவும், குறிப்பாக ரத்த சோகை குறைபாட்டினை நீக்கவும், பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் வருகையை அதிகரிக்கவும் மற்றும் கல்வியை தக்க வைத்துக்கொள்ளவும், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமை யை குறைக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

காலை உணவுத்திட்டத்தினை கண்காணிக்க மாவட்ட அளவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஊரக வாழ்வாதார இயக்கம், பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் துறை, உணவுப்பாதுகாப்புத்துறை ஆகிய துறைகளின் அலுவ லர்களை உறுப்பினர்களாக கொண்ட மாவட்ட கண்கா ணிப்பு குழு அமைக்கப்பட்டு வாரந்தோறும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

வட்டார அளவில் காலை உணவுத்திட்டத்தினை கண்காணிக்க உதவி திட்ட அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊர் நல அலுவலர்கள், விரிவுஅலுவ லர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு மையங்களை பார்வையிட்டு வாரந்தோறும் அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் 25.8.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சரால் இரண்டாம் கட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தொடங்கி வைக்கப்படவுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் 251 கிராம ஊராட்சிகளில் 797 பள்ளிகளில் பயிலும் 37,018 மாணவ, மாணவிகளுக்கும், 14 பேரூராட்சிகளில் 95 பள்ளிகளில் பயிலும் 4,555 மாணவ, மாணவிகளுக்கும், 6 நகராட்சிகளில் 59 பள்ளிகளில் பயிலும் 5,648 மாணவ,மாணவிகளுக்கும் சென்ட்ரலைசடு கிட்சன் மூலம் நகராட்சி பகுதியில் உள்ள 2 பேரூராட்சிகளில் 10 பள்ளிகளில் பயிலும் 784 மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் மாநகராட்சியில் உள்ள 120 பள்ளிகளில் பயிலும் 27,477 மாணவ, மாணவிகளுக்கும் என மொத்தம் 1,081 பள்ளிகளில் 75,482 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதலமை ச்சரின் காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.

எனவே சமையலறையை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும், குறித்த நேரத்தில் உணவு வழங்குவது குறித்தும், தேவையான நடவடிக்கைகளை துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறு த்தப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) வரலட்சுமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (சத்துணவு) ஹேமலதா மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News