உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

தாராபுரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - 2-ந்தேதி நடக்கிறது

Published On 2023-10-27 11:29 GMT   |   Update On 2023-10-27 11:30 GMT
  • 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.
  • கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள், தையல் கற்றவர்கள் என அனைத்து வித தகுதியாளர்களும் கலந்து கொள்ளலாம்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டாக்டர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மகளிர் திட்ட அலுவலகம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தாராபுரம் மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2.11.2023 அன்று காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். 10ம் வகுப்பு, பிளஸ்-2, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி, பொறியியல் மற்றும் தொழிற் கல்வி பெற்றவர்கள், கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள், தையல் கற்றவர்கள் என அனைத்து வித தகுதியாளர்களும் கலந்து கொள்ளலாம்.

இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசமானதாகும். இம்முகாமில் பங்கேற்க www.tnprivatejobs.tn.gov.in, என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனை வோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் குறித்த வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை 0421-2999152 அல்லது 94990 55944 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News