உள்ளூர் செய்திகள்

வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பணிக்கு ஆட்கள் தேர்வு

Published On 2023-11-13 11:20 GMT   |   Update On 2023-11-13 11:21 GMT
  • வேளாண் பல்கலையின் ஆராய்ச்சி உதவியாளர் பிரிவின் கீழ் தற்காலிக பணி வாய்ப்புகள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.
  • பி.எஸ்சி., அக்ரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள், 15-ந்தேதி நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம்.

திருப்பூர்:

வேளாண் பல்கலையின் ஆராய்ச்சி உதவியாளர் பிரிவின் கீழ் தற்காலிக பணி வாய்ப்புகள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பயிர் மேலாண்மை துறையின் கீழ், பயிர் பல்வகைப்படுத்துதல் பிரிவின் கீழ் திட்ட ஆராய்ச்சிக்கு ஓராண்டு தற்காலிக அடிப்படையில், இளம் தொழில்வல்லுநர் ஒருவரும், விவசாய பயிர்களில் விதை உற்பத்தி ஆராய்ச்சியின் கீழ் ஜூனியர் ஆராய்ச்சி உதவியாளர் ஒருவரும் நியமிக்கப்படவுள்ளனர். இதற்கு மாத ஊதியம், 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது. பி.எஸ்சி., அக்ரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள், 15-ந்தேதி நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம். நேர்காணல் காலை 9 மணிக்கு பயிர் மேலாண்மை துறையில் நடைபெறும். மேலும், விபரங்களை https://tnau.ac.in/ என்ற இணையதளத்தை பார்க்கலாம். 

Tags:    

Similar News