கோப்புபடம்
அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களுக்கு புதிய நடைமுறை 1-ந்தேதி முதல் அமல்
- கூட்டு மதிப்பின் அடிப்படையில் ஒரே விற்பனை ஆவணமாகப் பதிவு செய்யும் புதிய நடைமுறை வருகிற டிசம்பர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும்
- 7 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் :
அடுக்குமாடி குடியிருப்புகளை பதியும்போது கட்டிடம் மற்றும் அடிநிலம் சேர்ந்த கூட்டு மதிப்பின் அடிப்படையில் ஒரே விற்பனை ஆவணமாகப் பதிவு செய்யும் புதிய நடைமுறை வருகிற டிசம்பர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என பதிவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி ரூ.50 லட்சம் வரை உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முத்திரைத் தீர்வையை தற்போதுள்ள 7 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.50 லட்சம் முதல் ரூ.3 கோடி வரையிலான அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முத்திரைத் தீர்வையை 7 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.ரூ.20 லட்சம் வரையிலான புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவோர் விற்பனை கிரைய ஆவணம் பதிய முத்திரைத் தீர்வை 4 சதவீதம், பதிவுக் கட்டணம் 2 சதவீதம் செலுத்தினால் போதும். இந்த தகவலை பதிவுத்துறை விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.